லண்டன்: கெமரூன் காற்பந்து நட்சத்திரமான பிரயன் எம்பியூமோவை வாங்க இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் மான்செஸ்டர் யுனைடெட் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் ஆட்டக்காரரான எம்பியூமோவை ஏறத்தாழ 65 மில்லியன் பவுண்டுக்கு யுனைடெட் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மான்செஸ்டர் யுனைடெட்டின் தாக்குதல் ஆற்றலை வலுப்படுத்த அக்குழுவின் நிர்வாகி ரூபன் அமோரிம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த பருவத்தில் பிரெண்ட்ஃபர்ட் குழுவுக்காகக் களமிறங்கினார் எம்பியூமோ. 38 ஆட்டங்களில் களமிறங்கிய எம்பியூமோ 20 கோல்களைப் போட்டார்.
இது அமோரிமின் கவனத்தை ஈர்த்துள்ளதாக நம்பப்படுகிறது.