தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வாய்ப்புகளை வீணடித்துக்கொண்டே இருக்கக்கூடாது’

1 mins read
383855d3-e767-4802-bf69-2c33c9427e58
யுனைடெட்டின் சொந்த அரங்கில் நடந்த இபிஎல் ஆட்டத்தில் அக்குழு 1-0 எனும் கோல் கணக்கில் ஃபுல்ஹம் குழுவைப் போராடி வென்றது. - படம்: இபிஏ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) ஃபுல்ஹம் குழுவுக்கு எதிரான தங்கள் முதல் காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் பல கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்ததை அதன் நிர்வாகி எரிக் டென் ஹாக் ஒப்புக்கொண்டார்.

யுனைடெட்டின் சொந்த அரங்கில் நடந்த அந்த ஆட்டத்தில் அக்குழு 1-0 எனும் கோல் கணக்கில் போராடி வென்றதைத் தொடர்ந்து டென் ஹாக் இவ்வாறு கருத்துரைத்தார்.

தங்கள் ஆட்டக்காரர்கள் கோல் வாய்ப்புகளை ஏற்படுத்தத் தடுமாறியதைக் கண்டு யுனைடெட் ரசிகர்கள் அமைதி காத்தனர். அப்படி வாய்ப்புகளை உருவாக்கினாலும், கோல் போடும் சந்தர்ப்பங்களை ஆட்டக்காரர்கள் வீணடித்தனர்.

புதிய லீக் பருவத்துக்கு தம் வீரர்கள் தயாராக இல்லை என ஃபுல்ஹம் உடனான ஆட்டத்துக்கு முந்தைய தினம் டென் ஹாக் கூறியிருந்தார். காயங்கள் அல்லது போதிய உடலுறுதி இல்லாததன் காரணமாக முக்கிய ஆட்டக்காரர்கள் குழுவில் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்