லண்டன்: பிரபல இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் புதிய விளையாட்டு அரங்கத்தைக் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளது.
புதிய அரங்கத்தில் 100,000 பேர் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது உலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டு அரங்கம் என்று மான்செஸ்டர் யுனைடெட் கூறுகிறது.
புதிய அரங்கம் தற்போதுள்ள ஓல்ட் டிராஃபோர்ட் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் கட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வரலாற்று புகழ்பெற்ற ஓல்ட் டிராஃபோர்ட் அரங்கத்தை மான்செஸ்டர் யுனைடெட் மெருகேற்றும் என்று எதிர்பார்த்த நிலையில் புதிய அரங்கம் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

