அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறும் மான்செஸ்டர் யுனைடெட்

அண்மையில் முடிவுபெற்ற இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் பருவத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வேட்டை தொடர்கிறது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று (ஆகஸ்ட் 11ஆம் தேதி) அதிகாலை நடந்த ஐரோப்பா லீக் ஆட்டத்தில் அது 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் குழுவான கொப்பன்ஹேகன் வென்று போட்டியின் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பெனால்ட்டி வாய்ப்பு வழி தமது குழுவுக்கு வெற்றியை தேடித்தந்தார் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் புரூனோ ஃபர்னான்டேஸ்.

எதிரணியின் அரங்கில் ஆட்டத்தை மந்தமாக தொடங்கிய யுனைடெட் முதல் பாதியில் போதிய கோல் வாய்ப்புகளை உருவாக்கவில்லை.

இரண்டாம் பாதியில் யுனைடெட்டின் ஆட்டக்காரர்களின் ஃபர்னான்டேஸ், கிரீன்வுட் ஆகியோரின் கோல் முயற்சிகள் எதிரணியின் கோல் கம்பத்தின் மீது பட்டது ஆனால் வலைக்குள் செல்லவில்லை.

இந்த வெற்றியைத் தொடர்ந்து யுனைடெட் போட்டியின் அடுத்த சுற்றில் இங்கிலாந்தின் ஓல்வர்ஹேம்டன் குழு அல்லது ஸ்பானிய குழுவான செவியாவுடன் மோதும்.

இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி, வரும் திங்கள் அன்று (17/8), அதிகாலை 3 மணிக்கு நடக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!