தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு

1 mins read
dbd5b0ee-539f-4392-8f10-6aaeaa8ee0c9
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வேல். - படம்: இணையம்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில், ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை மேக்ஸ்வெல் எடுத்திருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அனைத்துலக கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன மேக்ஸ்வெல், இதுவரை 149 அனைத்துலக போட்டிகளில் விளையாடியுள்ளார். 3,990 ஓட்டங்கள் குவித்து, 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 2015, 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்று, கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி ஓட்டம் 33.81 ஆகும். ஸ்டிரைக் ரேட் 126.70 ஆக உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த 2023 உலகக் கிண்ணத் தொடரின்போது 201 ஓட்டங்களை அடித்து தனி ஒரு நபராக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஒருநாள் போட்டி வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

மூன்று சதங்கள், 23 அரைசதங்களை மேக்ஸ்வெல் அடித்துள்ளார். மேக்ஸ்வெல் பந்தடிக்கும் பாணிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. வெற்றியாளர் விருது தொடரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியே மேக்ஸ்வெல் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியாகும். இந்தப்போட்டியில் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்லின் திடீர் ஓய்வு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்