ஆட்டத்தின்போது காயமடைந்து தூக்கிச் செல்லப்பட்ட நெய்மார்

பாரிஸ்: ஆட்டத்தின் கடைசி நேரத்தில் லயனல் மெஸ்ஸி ‘ஃபிரீ கிக்’ மூலம் அடித்த கோலால், பிரெஞ்சுக் காற்பந்து லீக் ஆட்டமொன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மான் (பிஎஸ்ஜி) குழு 4-3 என்ற கோல் கணக்கில் லீல் குழுவைத் தோற்கடித்தது.

நேற்றிரவு (20-02-2023) நடந்த இந்த ஆட்டத்தில் கிலியன் எம்பாப்பே இரு கோல்களையும் நெய்மார் ஒரு கோலையும் போட்டனர்.

இதனையடுத்து, தொடர்ந்து மூன்று ஆட்டங்களாகத் தோல்வி கண்ட பிஎஸ்ஜியின் சோகப் பயணம் முடிவிற்கு வந்தது. 

இப்போதைக்கு, இரண்டாம் நிலையில் உள்ள மார்சே குழுவைவிட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று, பட்டியலின் முதலிடத்தில் உள்ளது பிஎஸ்ஜி.

ஆயினும், லீல் குழுவிற்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் காயமுற்று வெளியேறியது அக்குழுவிற்குச் சற்று பின்னடைவாக அமைந்துள்ளது.

கணுக்காலில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக நெய்மாரால் நடக்க இயலவில்லை. இதனையடுத்து, அவர் தூக்குப் படுக்கை மூலமாகத் திடலுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தன்மை குறித்து இன்னும் தெரியவில்லை என்று பிஎஸ்ஜி நிர்வாகி கிறிஸ்டோஃப் கால்டியர் கூறினார்.

இந்நிலையில், இவ்வார இறுதியில் மார்சே குழுவிற்கு எதிராக லீக் ஆட்டத்திலும் பின்னர் பயர்ன் மியூனிக் குழுவிற்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்திலும் பிஎஸ்ஜி விளையாடவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!