மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை

1 mins read
aaa34dbb-fe9c-43ad-b1e1-aa5bf80b49ee
தென்னமெரிக்க காற்பந்துக் கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள தமது சிலையுடன் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

பராகுவே: கத்தார் உலகக் கிண்ணப் போட்டிகளின் நாயகனும் அர்ஜென்டினா அணித்தலைவருமான லயனல் மெஸ்ஸியின் முழு உருவச் சிலை தென்னமெரிக்க காற்பந்துக் கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவை உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வழிநடத்தி, 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணம் வென்று தந்த மெஸ்ஸியின் சிலை அவரது வழிகாட்டியும் 1986 உலகக் கிண்ண நாயகனுமான டியேகோ மரடோனா மற்றும் பிரேசில் சகாப்தம் பெலேவின் சிலைகளுக்கு அருகே இடம்பெறவுள்ளது.

திங்கட்கிழமை பராகுவேயில் இடம்பெற்ற சிலைத்திறப்பு நிகழ்வில் பங்கேற்ற மெஸ்ஸி, 35, தமது உருவச்சிலைக்கு அருகே நின்று புன்னகை பூத்தார்.

"இப்படி ஒரு சிலை அமையும் என்று நான் கனவுகூட கண்டதில்லை," என்று அவர் வியந்தார்.