காற்பந்து நடுவரின் செயலால் அதிர்ச்சி

காற்பந்து நடுவரின் செயலால் அதிர்ச்சி

1 mins read
4e432984-e4a0-4c94-8195-b5d9cdac1a9a
நடுவர் ஹெர்னாண்டசின் செயலுக்கு மெக்சிகோ ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. டுவிட்டர் காணொளிப்படம் / ஃபெலிப்பே ராமோஸ் ரிசோ -
Google News Preferred Icon

காற்பந்து ஆட்டக்காரர் ஒருவரின் தொடையிடுக்கில் கள நடுவர் தனது முழங்காலால் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் லயான் - அமெரிக்கா குழுக்கள் மோதிய ஆட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றது.

அதில், அமெரிக்கக் குழு பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது. நடுவர் ஃபெர்னாண்டோ ஹெர்னாண்டசும் அதனை கோலாக அறிவித்தார்.

ஆனால், காணொளி உதவி நடுவர் மறுஆய்வு தேவை என்று கோரி, லயான் குழு வீரர்கள் நடுவரை முற்றுகையிட்டனர்.

அப்போது நடுவர் ஹெர்னாண்டஸ், லயான் ஆட்டக்காரர் லூக்கஸ் ரொமேரோவின் தொடையிடுக்கில் தமது முழங்காலால் இடிப்பதும் வலி தாளாமல் ரொமேரோ கீழே விழுவதும் காணொளியில் தெரிந்தது.

இதனையடுத்து, மெக்சிகோ காற்பந்துக் கூட்டமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விசாரணை முடிவுகளைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்று காற்பந்து நடுவர்கள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹெர்னாண்டசின் செயலை உள்ளூர் ஊடகங்கள் கண்டித்துள்ள போதும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ரொமேரோ கோரவில்லை.

"நடுவர்களும் மனிதர்கள்தான். பல நேரங்களில் அவர்களும் தவறு செய்யலாம். பலமுறை அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன," என்றார் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரொமேரோ.