மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ எஃப் 1 கார் பந்தயத்தில் ஃபெராரி அணியின் கார்லோஸ் சைன்ஸ் வாகை சூடினார்.
இந்தப் பந்தயம் அக்டோபர் 28ஆம் தேதியன்று நடைபெற்றது.
இதுவே இப்பருவத்தில் சைன்ஸ் பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி.
பந்தயத்தின் முதல் சுற்றில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பனிடம் முன்னிலையை இழந்தபோதிலும் துவண்டுவிடாமல் மின்னல் வேகத்தில் காரைச் செலுத்திய சைன்ஸ் வெற்றிக் கனியைச் சுவைத்தார்.
இரண்டாவது இடத்தை மெக்லேரன் அணியின் லெண்டன் நாரிசும் மூன்றாவது இடத்தை ஃபெராரியின் சார்ல்ஸ் லெக்லேர்க்கும் பிடித்தனர்.
வெர்ஸ்டப்பன், ஆறாவது இடத்தில் பந்தயத்தை முடித்தார்.