பிரபல விளையாட்டாளரின் காலணி $2.9 மில்லியனுக்கு விலைபோனது

பிரபல விளையாட்டாளரின் காலணி $2.9 மில்லியனுக்கு விலைபோனது

1 mins read
5e14a8b7-88d0-48cb-acf0-31a55b0a92cd
படம்: சாத்தபே -
Google News Preferred Icon

பிரபல கூடைப்பந்து விளையாட்டாளர் மைக்கல் ஜோர்டன் பயன்படுத்திய ஒரு ஜோடி காலணி 2.9 மில்லியன் வெள்ளிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

ஒரு காலணி இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. சாத்தபே நிறுவனம் மூலம் ஏலம் போன அந்தக் காலணிகள் கிட்டத்தட்ட 4 மில்லியன் அமெரிக்க டாலர் வரை விலைபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏர் ஜோர்டன் XIII என்ற அந்தக் காலணியை ஜோர்டன், சிக்காகோ புல்ஸ் அணிக்காக 1997-98 ஆண்டு நடந்த என்பிஏ கூடைப்பந்து போட்டிகளில் விளையாடியபோது பயன்படுத்தினார்.

விற்கப்பட்ட காலணியின் அளவு 13 ஆகும்.

2021ஆம் ஆண்டு ஜோர்டன் அணிந்திருந்த மற்றொரு காலணி ஏலத்தில் விற்கப்பட்டது, அது 1.47 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையானது.

இதற்கு முன்னர், ஜோர்டன் 1998ஆம் ஆண்டு என்பிஏ கூடைப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் அணிந்த சட்டை 10.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.