கேப்டவுன்: 2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் மௌரிடானியாவை எகிப்து வீழ்த்தியது.
அக்டோபர் 11ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எகிப்துக்காக டிரேசிகுவே, முகம்மது சாலா ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
ஆனால் கோல் போட கிட்டத்தட்ட 70 நிமிடங்களுக்குப் போராட வேண்டிய நிலை எகிப்துக்கு ஏற்பட்டது.
ஒருவழியாக, சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவு செய்த எகிப்து, ‘சி’ பிரிவில் முன்னிலை வகிக்கிறது.
மௌரிடானியாவுக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவால்மிக்கதாக இருந்தது என்றும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி தமது குழு வெற்றிக் கனியைப் பறித்தது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் எகிப்தின் பயிற்றுவிப்பாளர் ஹொசாம் ஹசான் கூறினார்.
மற்றோர் ஆட்டத்தில் கொமோரோஸ் குழுவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் துனிசியா அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
அந்த ஆட்டத்தை துனிசியா எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தோல்வி அடைந்தபோதும் ஆறு புள்ளிகளுடன் ஏ பிரிவில் அது தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து புள்ளிகளுடன் கொமோரோஸ் குழு இரண்டாவது நிலையில் இருக்கிறது.

