கோஹ்லிக்குப் பாகிஸ்தான் வீரர் ஆதரவு

1 mins read
976f8763-a472-4660-99d0-b8ac68305c1b
இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு (இடது) ஆதரவு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பாகிஸ்தானின் முகம்மது அமீர். படம்: டுவிட்டர்/முகம்மது அமீர் -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கு மீண்டும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது அமீர்.

"கோஹ்லியால் எல்லா நாளும் ஓட்டம் குவிக்கவோ இந்திய அணியை வெற்றிபெற வைக்கவோ முடியாது. அவரை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும்," என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார் அமீர்.

கோஹ்லியும் மனிதர்தான், அவர் ஒன்றும் 'ரிமோட்' இல்லை என்றும் அமீர் கூறினார்.

"கடினமான டெல்லி ஆடுகளத்தில் கோஹ்லி 44 ஓட்டங்கள் குவித்தார். அதனை நாம் பாராட்ட வேண்டும்," என்றார் அவர்.

டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டம் குவிக்கத் திணறி வருகிறார் என்றும் சதம் அடிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், அண்மையில் அகமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி 186 ஓட்டங்களைக் குவித்தது, அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி தரும் வகையில் அமைந்தது.