சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்குக் கூடுதல் பரிசுப் பணம்

சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்குக் கூடுதல் பரிசுப் பணம்

1 mins read
36352f66-c086-425c-91dd-4385dfab6cab
லீக் வெற்றியாளருக்கு $200,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிக்கான மொத்த பரிசுப் பணம் $290,000லிருந்து $600,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, போட்டியிடும் குழுக்கள் ஒவ்வோர் ஆட்டத்திலும் அதிகபட்சம் ஏழு வெளிநாட்டு ஆட்டக்காரர்களைக் களமிறக்கலாம்.

சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் போட்டித்தன்மையையும் தரத்தையும் மேம்படுத்த சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

2025-26 பருவத்தில் எட்டு குழுக்கள் அடங்கிய போட்டியாக சிங்கப்பூர் பிரிமியர் லீக் அமையும் என்று புதன்கிழமையன்று (ஜூலை 2) சங்கம் தெரிவித்தது.

லீக் வெற்றியாளருக்கு $200,000 பரிசுத் தொகை வழங்கப்படும். இரண்டாவது நிலை பிடிக்கும் குழுவுக்கு $150,000 வழங்கப்படும்.

மூன்றாம் நிலை பிடிக்கும் குழுவுக்கு $100,000 வழங்கப்படும். நான்காவது இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு $70,000 வழங்கப்படும்.

கடந்த பருவத்தில் முதல் நான்கு குழுக்களுக்கு மட்டும் பரிசுப் பணம் வழங்கப்பட்டது.

2025-26 பருவத்தில் ஐந்தாம், ஆறாம் இடங்களைப் பிடிக்கும் குழுக்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக முறையே $50,000, $30,000 வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்