கெமரூனைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய மொரோக்கோ

1 mins read
ae95cf70-2e6b-462e-8e24-114783e56038
மொரோக்கோவின் முதல் கோலைப் போட்ட பிரஹிம் டியாஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

ரபாட்: ஆப்பிரிக்க நேஷன்ஸ் காற்பந்துக் கிண்ணத்தின் காலிறுதி ஆட்டத்தில் மொரோக்கோவும் கெமரூனும் மோதின.

ஆப்பிரிக்காவின் காற்பந்து ஜாம்பவான்களான இவ்விரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் விளையாடின.

இறுதியில், 2-0 எனும் கோல் கணக்கில் மொரோக்கோ வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆப்பிரிக்க நேஷன்ஸ் கிண்ணத்தை வெல்ல மொரோக்கோ கொண்டுள்ள கனவு நனவாகும் சாத்தியம் தொடர்கிறது.

மொரோக்கோவுக்காக இஸ்மாயில் சைபாரியும் பிரஹிம் டியாசும் கோல் போட்டனர்.

பிரஹிம் டியாஸ் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் கோல் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் மொரோக்கோவுக்கு எதிராக இதுவரை எந்த ஒரு குழுவும் கோல் போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அல்ஜீரியாவும் நைஜீரியாவும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் குழுவை ஜனவரி 14ஆம் தேதியன்று மொரோக்கோ சந்திக்கும். இந்த ஆட்டம் மொரோக்கோவின் ரபாட் தலைநகரில் நடைபெறும்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மாலியை 1-0 எனும் கோல் கணக்கில் செனகல் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

குறிப்புச் சொற்கள்