சைக்கிள் பந்தயத்தில் விபத்து; ஒருவர் மரணம்

1 mins read
f55cfed6-7b7a-43b9-96de-868e27382784
படம்: சமூகஊடகம் -

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் 'ஐரோப்பிய சாம்பியன்‌ஷிப்க்கான இரும்புமனிதன்' போட்டி நடந்துவருகிறது.

போட்டியில் சைக்கிள் பந்தயம் நடந்து கொண்டிருந்த போது போட்டியாளர் ஒருவர் காணொளி எடுக்கும் நபரை எந்திச் செல்லும் மோட்டர் சைக்கிள் மீது மோதினார்.

அதில் சம்பவ இடத்திலேயே மோட்டர் சைக்கிளோட்டி மாண்டார். சைக்கிளோடிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காணொளி எடுத்த நபர் சிறு காயங்களுடன் தப்பித்தார்.

பந்தயத்தை நேரலையாகக் காட்டிக்கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது. விபத்தைத் தொடர்ந்து நேரலை நிறுத்தப்பட்டது.

மோட்டர் சைக்கிளோட்டிகளுக்கும் சைக்கிள் ஓட்டிகளுக்கும் ஒரே சாலை என்பதால் இருவரும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குப்பின் சில நேரம் நிறுத்தப்பட்ட பந்தயம் மீண்டும் தொடங்கியது.

ஐரோப்பிய சாம்பியன்‌ஷிப்க்கான இரும்புமனிதன் போட்டியில் 3.8 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிள் பந்தயம், நெடுத்தொலைவு ஓட்டம் ஆகியவை இருக்கும்.

இதில் வெற்றிபெறுபவர்களும் தகுதிபெறுபவர்களும் பிரான்சில் இவ்வாண்டு நடக்கவுள்ள உலக இரும்புமனிதன் போட்டியில் பங்கேற்பார்கள்

குறிப்புச் சொற்கள்
விபத்துஜெர்மனி