ஐபிஎல் தொடரின் 1000வது ஆட்டத்தில் மும்பை வெற்றி

1 mins read
dd77a6e6-1fd2-46bd-8f72-30bdd2a4d2c5
படம்: டுவிட்டர்/மும்பை இந்தியன்ஸ் -

ஐபிஎல் தொடரின் 1000வது ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றுள்ளது.

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக 16ஆவது ஆண்டில் பயணம் செய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) மும்பையில் நடந்த இரவுப் போட்டி ஐபிஎல் வரலாற்றில் 1000வது ஆட்டமாக அமைந்தது.

அந்த ஆட்டத்தில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.

முதலில் பந்தடித்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ய‌ஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் 124 ஓட்டங்கள் குவித்தார்.

இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக ஆடி 19.3 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

முன்பு சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு விளையாடிய டிம் டேவிட் கடைசி ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்து மும்பையை வெற்றிபெறச் செய்தார்.

குறிப்புச் சொற்கள்