தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நே‌‌ஷன்ஸ் லீக் காற்பந்து: போர்ச்சுகல், ஸ்பெயின் வெற்றி

1 mins read
7b58c591-4c7f-46e3-9ede-0e54d85cd865
போர்ச்சுகல் அணியின் 39 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ காற்றில் பறந்து கோல் அடித்தார். - படம்: இபிஏ

போர்டோ: நே‌‌ஷன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியுள்ளது.

சனிக்கிழமை (நவம்பர் 16) அதிகாலை போலந்துக்கு எதிராக நடந்து முடிந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இருப்பினும் இரண்டாவது பாதியில் போர்ச்சுகல் வீரர்கள் புயலாக மாறினர்.

ஆட்டத்தின் 59, 72, 80, 83, 87 ஆகிய நிமிடங்களில் போர்ச்சுகல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுகல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய போலந்து ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.

போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறப்பாக விளையாடி 2 கோல்கள் அடித்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை நடந்து முடிந்த மற்றோர் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 15, 58வது நிமிடங்களில் ஸ்பெயின் கோல் அடித்தது. டென்மார்க் 84வது நிமிடத்தில் கோல் அடித்தது. இருப்பினும் ஸ்பெயின் இறுதியில் நிலையாக விளையாடி ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.

காலிறுதி சுற்றுக்கு போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்