பாரிஸ்: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். அது புதிய ஒலிம்பிக் சாதனையாகும்.
இரண்டாம் இடம் பிடித்த நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். 88.54 மீட்டர் தூரம் வீசிய கிரனேடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.
2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.