50 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் நடக்கும்.
திங்கள்கிழமை (மார்ச் 13) நேப்பாளம் - பாப்புவா நியூ கினி நாடுகள் மோதிய ஆட்டத்திலும் அப்படி சுவாரசியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
முதலில் பந்தடித்த பாப்புவா நியூ கினி அணி 32 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலக்கை விரட்டிய நேப்பாளம் 7.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.
ஆட்டத்தை 254 பந்துகள் மீதம் வைத்து நேப்பாளம் வென்றது.
அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற பட்டியலில் இந்த ஆட்டம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அப்பட்டியலில் இலங்கை - ஸிம்பாப்வே மோதிய ஆட்டம் முதலிடத்தில் உள்ளது.
2001ஆம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் 274 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் இலங்கை வென்றது.


