பாரிஸ்: விளையாட்டுகளை நேரடியாக ஒளிபரப்பும் முயற்சிகளை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஒடிடி தளம் எடுத்து வருகிறது.
அந்த வகையில் பெண்கள் பங்கேற்கும் அடுத்த இரு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை அமெரிக்காவில் ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது. அதன்படி 2027, 2031ஆம் ஆண்டுகளில் அரங்கேறவுள்ள பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி ஆட்டங்களை நெட்ஃபிளிக்ஸ் அமெரிக்காவில் நேரடியாக ஒளிபரப்பும்.
அவ்விரு போட்டிகளையும் முன்னிட்டு நெட்ஃபிளிக்ஸ், பெண்கள் காற்பந்து பற்றிய ஆவணப்படத் தொடரையும் தயாரித்து வெளியிடும்.
2027 பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி பிரேசிலில் நடைபெறும். போட்டி 2027ல் ஜூன் மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஜூலை 25ஆம் தேதி வரை நடக்கும்.
2032ஆம் ஆண்டுப் போட்டியை ஏற்று நடத்தும் நாடு பின்னர் தேர்ந்தெடுக்கப்படும்.
ஒப்பந்தத்தின்கீழ் நெட்ஃபிளிக்ஸ், பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி ஆட்டங்களை ஒளிபரப்பவுள்ள பகுதிகளில் புவெர்ட்டோ ரிக்கோவும் அடங்கும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.