பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியின் 200க்கும் அதிகமான பதக்கங்கள் சேதமடைந்துள்ளன.
இப்பதக்கங்களைத் தயாரித்த பிரெஞ்சு நிறுவனம் அவற்றுக்குப் பதிலாகப் புதிய பதக்கங்களைத் தயாரித்துத் தரும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தெரிவிக்கப்பட்டது.
தங்கள் பதக்கங்களின் நிறம் மாறிவிட்டதாகவும் உடைந்துவிட்டதாகவும் விளையாட்டு வீரர்கள் சிலர் புகார் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு போட்டிகள் முடிவடைந்து ஒருசில வாரங்களிலேயே பதக்கங்களின் தரம், நிலை குறித்து அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில், புதிய பதக்கங்கள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவை பார்ப்பதற்குப் போட்டியின்போது வழங்கப்பட்ட பதக்கங்களைப் போலவே இருக்கும் என்று அதைத் தயாரிக்கும் நிறுவனம் கூறியது.
ஆனால், அவற்றுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க அவற்றின் மீது ஒருவகையான மேற்பூச்சு பூசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி ஆகிய போட்டிகளில் மொத்தம் 5,084 பதக்கங்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சேதமடைந்த பதக்கங்கள் அவற்றில் நான்கு விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டது.