தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓர் ஓட்டத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற நியூசிலாந்து

1 mins read
d11a7521-0c7d-4eb8-b2fe-908c0bdd1e51
படம்: ராய்ட்டர்ஸ் -

வெலிங்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஓர் ஓட்டத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நியூசிலாந்து அணிக்கு அதன் பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் அபாரமாகக் கைகொடுக்க, ஓர் ஓட்டத்தில் அவ்வணி வெற்றி பெற்றது.

முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 435 ஓட்டங்கள் எடுத்தது.

நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 209 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 'ஃபாலோ ஆன்' பெற்று மீண்டும் பந்தடித்தது.

இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாகப் பந்தடித்த நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 483 ஓட்டங்கள் எடுத்தது.

258 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இங்கிலாந்து எளிதில் வெற்றிபெறும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 200 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

ஆனால், அடுத்த 56 ஓட்டங்களில் அது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆட்டத்தை கோட்டைவிட்டது.

இரண்டாவது ஆட்டத்தை வென்ற நியூசிலாந்து, தொடரை 1-1 எனச் சமன்செய்தது.