நியூகாசல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் பிஎஸ்வி ஐன்ட்ஹோவனை 3-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இப்போட்டியின் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு, அதாவது ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் போட்டியிலிருந்து வெளியேறும் சுற்றுக்கு நியூகாசல் முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆட்டம் புதன்கிழமை (ஜனவரி 21) நியூகாசலின் செயிண்ட் ஜேம்சஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
சாம்பியன்ஸ் லீக் பட்டியலில் நியூகாசல் 13 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
முற்பாதி ஆட்டத்தில் நியூகாசல் இரண்டு கோல்களைப் போட்டது.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் யோவான் விஸ்ஸா கோல் போட்டு நியூகாசலை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் நியூகாசலின் இரண்டாவது கோலை ஆண்டனி கோர்டன் போட்டு தமது குழுவின் வெற்றி வாய்ப்பை வலுப்படுத்தினார்.
இடைவேளைக்கு முன்னதாக, நியூகாசலின் அணித் தலைவர் புரூனோ குய்மாரெசுக்குக் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரால் ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், மனந்தளராமல் விளையாடிய நியூகாசல், மூன்றாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது.
மூன்றாவது கோலை ஹார்வி பார்ன்ஸ் போட்டார்.

