மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் யுனைடெட் தோற்கடித்தது.
இந்த ஆட்டம் டிசம்பர் 30ஆம் தேதியன்று மான்செஸ்டர் யுனைடெட்டின் ஓல்டு டிராஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
ஆட்டத்தின் முதல் 19 நிமிடங்களிலேயே நியூகாசல் இரண்டு கோல்களைப் போட்டது.
நியூகாசலுக்காக அலெக்சாண்டர் இசாக்கும் ஜோஎலின்டனும் கோல்களைப் போட்டனர்.
சொந்த விளையாட்டரங்கில் யுனைடெட் தோல்வியின் பிடியில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
1979ஆம் ஆண்டுக்குப் பிறகு, சொந்த விளையாட்டரங்கில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி அடைந்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு லீக் ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி அடைந்துள்ளது.
இது அவமானத்துக்குரியது என்று அதன் நிர்வாகி ரூபன் அமோரிம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதே நிலை நீடித்தால் இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அவலம் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.