நியூகாசல்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு நியூகாசல் யுனைடெட் தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆர்சனலை அது 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் ஒட்டுமொத்த கோல் கணக்கில் 4-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் நியூகாசலின் அலெக்சாண்டர் இசாக் அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.
ஆனால் அப்பந்தை வலைக்குள் சேர்த்தார் நியூகாசலின் ஜேக்கப் மர்ஃபி.
ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ஆர்சனல் தற்காப்பில் ஏற்பட்ட குழப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நியூகாசலின் இரண்டாவது கோலைப் போட்டார் ஆண்டனி கோர்டன்.
1955ஆம் ஆண்டிலிருந்து நியூகாசல் எந்த ஒரு கிண்ணத்தையும் வென்றதில்லை.
இந்நிலையில், இறுதி ஆட்டத்தில் அது லிவர்பூல் அல்லது ஸ்பர்ஸ் குழுவுடன் மோதும்.
தொடர்புடைய செய்திகள்
இறுதி ஆட்டம் அடுத்த மாதம் வெம்பிலி விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.