லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் செல்சியை 2-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் நியூகாசல் 66 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் முதல் ஐந்து இடங்களுக்கான போட்டி சூடு பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஆர்சனலைவிட நியூகாசல் இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஆர்சனலுடன் நியூகாசல் மோதுகிறது.
ஆறாவது இடத்தில் உள்ள ஆஸ்டன் வில்லாவைவிட நியூகாசல் மூன்று புள்ளிகள் மட்டுமே அதிகமாகப் பெற்றுள்ளது.
எனவே, லீக் போட்டியின் இறுதிகட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
செல்சிக்கு எதிரான ஆட்டம் தொடங்கி இரண்டு நிமிடங்களில் நியூகாசலின் சாண்ட்ரோ டொனாலி கோல் போட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நியூகாசலின் இரண்டாவது கோலை புருணோ குய்மாரேஸ் போட்டார்.
செல்சியின் நிக்கலஸ் ஜேக்சனுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதையடுத்து, வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் செல்சி விளையாடியது.
செல்சி 63 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.