இப்ஸ்விச்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் இப்ஸ்விச்சும் நியூகாசல் யுனைடெட்டும் டிசம்பர் 21ஆம் தேதியன்று மோதின.
கோல் மழை பொழிந்த நியூகாசல், 4-0 எனும் கோல் கணக்கில் இப்ஸ்விச்சைப் பந்தாடியது.
நியூகாசலின் நட்சத்திர ஆட்டக்காரர் அலெக்சாண்டர் இசாக் மூன்று கோல்களைப் போட்டு எதிரணியைத் திக்குமுக்காடச் செய்தார்.
ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளிலேயே இசாக் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
நியூகாசலின் இரண்டாவது கோலை ஜேக்கப் மர்ஃபி போட்டார்.
சில நிமிடங்கள் கழித்து, இப்ஸ்விச்சின் தற்காப்பில் ஏற்பட்ட குளறுபடியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இசாக் மீண்டும் கோல் போட்டார்.
இடைவேளையின்போது 3-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் மேலும் ஒரு கோலைப் போட்டு இப்ஸ்விச் குழுவின் கதையை முடித்து வைத்தார் இசாக்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் 12வது இடத்தில் இருந்த நியூகாசல் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அக்குழு 26 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இப்ஸ்விச் 12 புள்ளிகளுடன் 18வது நிமிடத்தில் உள்ளது.