மேன்யூவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பது ஸ்பர்ஸ் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்

மேன்யூவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பது ஸ்பர்ஸ் வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்

2 mins read
fe6182f4-9dcb-419c-ae5d-e5130912317d
2025, நவம்பர் 8ஆம் தேதி டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் மேன்யூவின் மேத்யூஸ் டிலிட் தனது அணியின் இரண்டாம் கோலைப் போட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: 2025 யூரோப்பா லீக் இறுதி காற்பந்துப் போட்டியில் பங்கேற்ற மான்செஸ்டர் யுனைடெட், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளின் எதிர்காலத்தையே மாற்றியது என்றும் இதனால் மிகவும் மாறுபட்ட சவால்கள் எழுந்தன என்றும் கூறலாம்.

யுனைடெட்டின் ஒரே கவனம் இந்தப் பருவத்தில் உள்நாட்டு காற்பந்தில் மட்டுமே உள்ளது. மேலும் அந்த அணி இப்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டின் 15வது இடத்தை விட இது ஒரு முன்னேற்றம்.

டோட்டன்ஹாமின் வெற்றிக்கான வெகுமதி சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறுவதாகும். மேலும் அவர்கள் நாக் அவுட் கட்டத்தை வியக்கத்தக்க வகையில் எட்டியிருந்தாலும், அது அவர்களின் பிரிமியர் லீக் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பருவத்தில் ஸ்பர்ஸ் அணி பிரிமியர் லீக்கில் 14வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

மேலும் காயமடைந்த ஆட்டக்காரர்கள் நெருக்கடியும் ஒரு பெரிய காரணம். அவர்களின் அணி பல முனைகளில் போட்டியிட முயற்சிக்கும் சிரமத்தை எதிர்கொள்கிறது.

பிப்ரவரி 7ஆம் தேதி டோட்டன்ஹாமுக்கு எதிரான சொந்த மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மூன்று மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

அவர்கள் மேத்தியூஸ் டிலிக்ட், ட்ரிக் டோர்கு, மேசன் மவுண்ட்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேன்யூவின் தற்காலிக நிர்வாகி மைக்கல் கேரிக், இந்த மூவரில் மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கு மவுண்ட் மிக நெருங்கி வந்துள்ளார் என்றும், ஆனால் டோட்டன்ஹாமை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர் சரியான நிலையில் இருக்க மாட்டார் என்றும் கூறினார்.

டோட்டன்ஹாம் அணி இன்னும் நீண்ட காயப் பட்டியலைக் கொண்டுள்ளது. ஒன்பது வீரர்கள் மேன்யூவுக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக விளையாட மாட்டார்கள்.

ஜேம்ஸ் மேடிசன், கெவின் டான்சோ, ரிச்சர்லிசன், லூகாஸ் பெர்க்வால், முகமது குடுஸ், பெட்ரோ போரோ, தேஜான் குலுசெவ்ஸ்கி, ரோட்ரிகோ பென்டன்குர், பென் டேவிஸ் ஆகிய ஒன்பது பேர்.

டோட்டன்ஹாமின் லீக் நிலை மற்றும் காயப் பட்டியல் இந்த வார இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட்டை எந்தவிதமான மெத்தனப் போக்கிலும் ஆழ்த்தக்கூடாது.

ஒரு வாரத்திற்கு முன்பு சிட்டிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து போராடி ஆட்டத்தைச் சமன் செய்த, அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு டோட்டன்ஹாம் அணியில் இன்னும் போதுமான தரம் உள்ளது.

எது எப்படி இருந்தாலும், ஒரு விறுவிறுப்பான ஆட்டம் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது என்று கூறலாம்.

குறிப்புச் சொற்கள்