மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களான செல்சி, மான்செஸ்டர் சிட்டி ஆகியவை தகுதி பெற்றுள்ளன.
நான்காவது நிலை லீக்கில் விளையாடும் பேரோ குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் செல்சி பந்தாடியது.
செல்சியின் கிறிஸ்டஃபர் எங்குன்கு மூன்று கோல்களைப் போட்டார்.
இப்பருவத்தில் செல்சிக்காக ஏழு ஆட்டங்களில் களமிறங்கியுள்ள என்குன்கு இதுவரை ஆறு கோல்களைப் போட்டுள்ளார்.
மற்றோர் ஆட்டத்தில் வாட்ஃபர்ட் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது.
2-0 எனும் கோல் கணக்கில் சிட்டி முன்னிலை வகித்தபோது வாட்ஃபர்ட் குழுவுக்காக டாம் இன்ஸ் கோல் போட்டார்.
இவர் மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் பால் இன்சின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டாம் இன்ஸ் போட்ட கோல் ஆறுதல் கோலாகவே அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
மற்றோர் ஆட்டத்தில் வைக்கோம் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா தோற்கடித்தது.
லெஸ்டர் சிட்டிக்கும் நான்காவது நிலை லீக்கில் விளையாடும் வால்சால் குழுவுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது.
இதில் 3-0 எனும் கோல் கணக்கில் லெஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது.

