தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வேறெந்த வீரராலும் இதைச் செய்ய முடியாது': டோனியின் சாதனையைப் பாராட்டிய சேவாக்

1 mins read
53e981b0-757c-42b6-8039-1f15ab055f68
படம்: ஏஎஃப்பி -

இந்திய பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) 5,000 ஓட்டங்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கில் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி இந்த மைல்கல்லை எட்டினார்.

இந்த மைல்கல்லை எட்டிய ஏழாவது பந்தடிப்பாளர் டோனி என்ற போதிலும், கீழ் நடுவரிசையில் பந்தடித்துவரும் இவர், இந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டியிருப்பது மெச்சத்தக்கது.

இந்நிலையில், டோனியின் சாதனையை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நடுவரிசையில் விளையாடும் டோனியால் மட்டுமே இத்தனை ஓட்டங்களை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

டோனி மைல்கற்களைத் துரத்துவதில்லை எனச் சொன்ன சேவாக், ஐபிஎல்லில் 5,000 ஓட்ட மைல்கல்லை எட்டியிருப்பது, டோனிக்கு எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார்.