தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி

1 mins read
348039aa-8a7e-4e0d-b130-8f4e5caf7444
வெண்கலப் பதக்கம் வென்று கொண்டாட்ட மழையில் நனைந்த இந்திய ஹாக்கி ஆட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி (ஆண்கள்) வெண்கலம் வென்றுள்ளது.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவும் ஸ்பெயினும் மோதின.

இதில் இந்தியா 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

இந்தியாவின் இரண்டு கோல்களையும் அதன் அணித் தலைவர் ஹர்மான்பிரீத் சிங், பெனால்டி கார்னர் மூலம் போட்டார்.

இதுவே இந்திய ஹாக்கி அணியின் கோல்காப்பாளர் பி.ஆர். ஸ்ரீஜேஷின் கடைசி அனைத்துலகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பெருமையுடன் அவர் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது.

இதற்கிடையே, இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தும் ஜெர்மனியும் மோதின.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையானதாக இருந்தது.

ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிய, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷுட்அவுட் முறை நடத்தப்பட்டது.

இதில் நெதர்லாந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது.

ஜெர்மனிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்