தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒலிம்பிக் வீராங்கனையைத் தீவைத்து எரித்துக் கொன்ற காதலன்

1 mins read
5ddbecae-057b-4707-b333-3de674813d2d
ரெபெக்கா செப்டிகேய் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

நைரோபி: அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த உகாண்டா நெடுந்தொலைவு ஓட்ட வீராங்கனை ரெபெக்கா செப்டிகேய் மிகக் கடுமையான தீக்காயங்கள் காரணமாக செப்டம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

செப்டிகேய் மீது அவரது காதலர் டிக்சன் என்டிமா மரான்காச் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் செப்டம்பர் 1ஆம் தேதியன்று நிகழ்ந்தது

33 வயது செப்டிகேய் செப்டம்பர் 5ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி கென்யாவில் உள்ள மருத்துவமனையில் மாண்டார்.

அவர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவரது பல உடல் உறுப்புகள் செயலிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.

தாக்குதல் நடத்திய மரான்காச்சுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமது தாயார் தாக்கப்பட்டதை செப்டிகேயின் இரண்டு மகள்களும் பார்த்தனர்.

அவர்களுக்கு 9 மற்றும் 11 வயது.

செப்டிகேய்க்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்