தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் ஹகோடா

1 mins read
efacf6b5-842f-44aa-8c3a-b53b9ccb480b
ஹகோடா சேமா வெண்கலப் பதக்கம் வென்றார். - படம்: இந்திய ஊடகம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உடற்குறையுள்ளோருக்கான (பாரா) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் ஹகோடா சேமா வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 12வது வெண்கலப் பதக்கம் ஆகும்.

ஈரான் தங்கமும், பிரேசில் வெள்ளிப் பதக்கமும் வென்றன.

நாகாலாந்தில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்