டெல்லி திரும்பிய வீரர், வீராங்கனைகள்: அவனி லெகரா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு

1 mins read
d9df1119-2172-455b-9f32-d5c4293fb4f9
துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா. - படம்: இந்திய ஊடகம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. செப்டம்பர் 8ஆம் தேதி இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.

இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரிசில் இருந்து சனிக்கிழமை காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்