உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தனது 14ஆவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இத்துடன் குறைந்த பந்துகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டனில் ஜூன்11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212க்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 138 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில். பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, 2ஆம் நாள் முடிவில் 144 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.