கிரிக்கெட்: ஒருநாள் போட்டிகளுக்கும் இவரே தலைவர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பாட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கம்மின்ஸின் தாயார் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) காலமானார். 

தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரின் நடுவிலேயே கம்மின்ஸ் தாயகம் திரும்பினர். 

அதனையடுத்து, அவருக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளிலும் அணியை வழிநடத்தினார்.

தற்போது கம்மின்ஸ் ஒருநாள் தொடரிலும் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஸ்மித் ஒருநாள் தொடரில் அணித்தலைவராகச் செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரூ மெக்டோனல்ட் தெரிவித்தார். 

காயங்களால் அவதிப்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களான கிளன் மேக்ஸ்வெல், மிட்செல் மார்‌ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மார்ச் 17ஆம் தேதி மும்பையில் நடக்கிறது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!