தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்பாவின் தடை 18 மாதமாக குறைப்பு; ரசிகர்கள் மகிழ்ச்சி

1 mins read
6dbb31ed-dccb-46b6-af3c-9d801b072e29
பிரான்ஸ் காற்பந்து வீரர் பால் போக்பா. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: பிரான்ஸ் காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் பால் போக்பாவின் தடை 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய போக்பாவுக்கு முதலில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தற்போது அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் போக்பா மீண்டும் அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுவரை இத்தாலியின் யுவண்டஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள போக்பா, வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் விளையாடுவார்.

“தமது கெட்ட கனவு முடிந்துவிட்டது, எனக்குப் பிடித்த வாழ்க்கையை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளேன்,” என்று போக்பா தெரிவித்தார்.

விளையாட்டுத் திறனை மேம்படுத்தக்கூடிய எந்த மருந்தையும் வேண்டுமென்றே உட்கொள்ளவில்லை என்று போக்பா தொடக்கம் முதலே தெரிவித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் 32 வயதை எட்டும் போக்பாவுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் போக்பாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) சான்றுகள் இருந்தன.

அதைத்தொடர்ந்து போக்பா 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் காற்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டது. 

குறிப்புச் சொற்கள்