பார்பேடாஸ்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பூரன் 3 சிக்சர்கள் அடித்தார். அதன் மூலம் நடப்பு உலகக் கிண்ணத்தில் பூரன் 17 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் டி20 உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை தகர்த்துள்ளார் பூரன்.
இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் 16 சிக்சர்கள் அடித்திருந்தார். மூன்றாம் இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ், ஆஸ்திரேலியாவின் சேன் வாட்சன் 15 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
பூரன் இந்த தொடரில் இன்னும் சில ஆட்டங்களில் விளையாடுவார் என்பதால் அவரின் சிக்சர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.