நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்த பிரக்ஞானந்தா

நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்த பிரக்ஞானந்தா

1 mins read
fce769cd-a69f-4c32-9fb1-1a153a77ced1
ஆர். பிரக்ஞானந்தா - படம்: பிடிஐ
Google News Preferred Icon

ஆஸ்லோ: நான்காவது நார்வே அனைத்துலக சதுரங்கப் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்தது. இதில் பங்கேற்றுள்ள ஆறு வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் இரண்டு முறை மோத வேண்டும்.

ஒன்பதாவது சுற்று முடிவில் வெஸ்லி சோ 15½ புள்ளிகளுடன் முதல் இடத்திலும்,  பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அலிரெஜா 14½ புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடந்த 10வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் 20 வயது பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரைத் தோற்கடித்தார்.

கடந்த நான்கு நாள்களில் அலிரேசா ஃபிரூஜா, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், உலக வெற்றியாளர் குகேஷ் ஆகியோருக்கு எதிரான பிரக்ஞானந்தாவின் வெற்றிகளைத் தொடர்ந்து, கெய்மருக்கு எதிரான இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இதன்மூலம் நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.

ஏறகெனவே, ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய ஆனந்தின் 19 ஆண்டுகால சாதனையையும் பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
கிராண்ட்மாஸ்டர்பிரக்ஞானந்தாகுகேஷ்நார்வே