டெல்லி: நெதர்லாந்தில் 87வது டாட்டா ஸ்டீல் அனைத்துலக சதுரங்கப் போட்டி நடந்து வருகிறது.
இதில் ‘மாஸ்டர்ஸ்’ பிரிவில் 12 சுற்றுகள் முடிவில் குகேஷ், பிரக்ஞானந்தா தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற 13வது மற்றும் கடைசி சுற்றில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினார்.
குகேஷ் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசிக்கு எதிராகவும், பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிராகவும் தோல்வியடைந்தனர்.
இதனால் மீண்டும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா சம புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ‘டை பிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது.
அதில் உலகச் சதுரங்க வெற்றியாளரான குகேஷை பிரக்ஞானந்தா வீழ்த்தி கிண்ணத்தையும் பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்.