டி20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா உலக சாதனை

டி20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா உலக சாதனை

1 mins read
d91a91f8-33cb-4b10-bb34-0f222791a01b
படம்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம்/டுவிட்டர் -
Google News Preferred Icon

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 போட்டியில் உலக சாதனை படைத்துள்ளது.

ஆக அதிக ஒட்டங்களை விரட்டி வெற்றிபெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

ஞாயிற்றுக்கிழமை செஞ்சூரியனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா விளையாடியது.

முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.

ஜான்சன் சார்ல்ஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்கள் குவித்தார். மற்றப் பந்தடிப்பாளர்களும் தங்கள் பங்குக்கு ஓட்டங்களைக் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களை எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் குவின்டன் டிகாக் சிறப்பாக விளையாடினார். அவர் 44 பந்துகளில் 100 ஓட்டங்களை விளாசினார். ரீசா ஹென்ரிக்ஸூம் 68 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்கா 18.5 ஓவரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 போட்டியில் இவ்வளவு பெரும் இலக்கை முதல்முறையாக தென்னாப்பிரிக்கா விரட்டி உலக சாதனை படைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்