தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலிடத்திற்கு முன்னேறினார் அஸ்வின்!

1 mins read
e256aea0-228c-4b5c-b9ae-55a08392e85d
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் இந்தியாவின் அஸ்வின். படம்: ஏஎஃப்பி -

அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்திற்கு உயர்ந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியது, இந்த ஏற்றத்திற்குக் கைகொடுத்தது.

எஞ்சியுள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் விக்கெட் வேட்டை நிகழ்த்தும் பட்சத்தில், அவர் தனது முதலிடத்தை வலுவாக்கிக்கொள்ளலாம்.

சென்ற மாதம் 22ஆம் தேதிதான் தரவரிசையில் முதலிடத்தை எட்டிப்பிடித்திருந்தார் இங்கிலாந்தின் 40 வயது வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆயினும், நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியதால், அஸ்வினிடம் அவர் முதலிடத்தை இழக்க நேர்ந்தது.

கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடாதபோதும் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா ஐந்தாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்கு முன்னேறினார். அதேபோல, மற்றோர் இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா எட்டாம் இடத்தை எட்டிப் பிடித்தார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜாவும் அஸ்வினும் முறையே முதலிரு இடங்களில் உள்ளனர். பந்தடிப்பாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேனும் ஸ்டீவ் ஸ்மித்தும் முதலிரு இடங்களைப் பிடித்துள்ளனர்.