தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோஹ்லிக்குப் பதிலாக ரஜத் சேர்ப்பு

1 mins read
9b5bb198-60b2-49c9-b526-31e675314e49
ரஜத் பட்டிதார். - படம்: ஊடகம்

ஹைதராபாத்: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் முதலிரு போட்டிகளிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி விலகியுள்ளார்.

இதனையடுத்து, அவருக்குப் பதிலாக 30 வயது ரஜத் பட்டிதார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் - இந்திய ‘ஏ’ அணிகள் மோதிய நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ரஜத் 158 பந்துகளில் 151 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

முதல்தரப் போட்டிகளில் 45.97 என்ற சராசரியுடன் 4,000 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். அதில் 12 சதங்களும் அடங்கும்.

கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதன் மூலம் அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தார் ரஜத்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஜத், ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 25) தொடங்குகிறது.

குறிப்புச் சொற்கள்