தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் வன்கொடுமை; மூன்று விளையாட்டு வீரர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை

1 mins read
f7367250-b9e9-40ff-a728-d5d4a03de7e0
மூன்று வீரர்களும் 2017ஆம் ஆண்டு மார்ச் 12 இரவு பிரான்சின் போடவ்வில் உள்ள ஹோட்டலில் கூட்டாக ஒரு மாணவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரான்ஸ் நீதிமன்றம் மூன்று ரக்பி விளையாட்டு வீரர்களுக்கு 12 முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மூன்று வீரர்களும் 2017ஆம் ஆண்டு மார்ச் 12 இரவு பிரான்சின் போடவ்வில் உள்ள ஹோட்டலில் கூட்டாக ஒரு மாணவரை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அயர்லாந்தைச் சேர்ந்த டெனிஸ் கோல்சன் (30), பிரான்சின் லாய்க் ஜேம்ஸ் (30) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நியூசிலாந்தைச் சேர்ந்த ராரி கிரைசுக்கு (34) 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், குற்றம் நடந்தபோது அதை தடுக்காமல் இருந்த இரண்டு வீரர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

அயர்லாந்தைச் சேர்ந்த கிரிஸ் பேரலுக்கு (31) நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விளையாட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த 30 வயது டைலன் ஹேசுக்கு 2 ஆண்டுகள் விளையாட்டில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்