தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்டன் வில்லாவில் இணைந்தார் ரா‌ஷ்போர்ட்

1 mins read
42f24363-bdbf-433d-a64e-e9f570199778
மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நம்பிக்கை நாயகன், எதிர்காலம் என்று போற்றப்பட்ட ரா‌ஷ்போர்ட் 426 ஆட்டங்களில் 138 கோல்கள் அடித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து குழுவான மான்செஸ்டர் யுனைடெட் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனது அணியின் முன்கள ஆட்டக்காரரான மார்கஸ் ரா‌ஷ்போர்டை ஆஸ்டன் வில்லா அணிக்கு ‘லோன்’ முறையில் மான்செஸ்டர் யுனைடெட் விற்றுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு நிர்வாகியாக ரூபன் அமோரிம் பொறுப்பேற்ற பிறகு ரா‌ஷ்போர்ட்டின் இடம் கேள்விக்குறியான நிலையில் தற்போது அவர் ஆஸ்டன் வில்லாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

27 வயது ரா‌ஷ்போர்ட் இப்பருவம் முடியும் வரை ஆஸ்டன் வில்லாவில் விளையாடுவார்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நம்பிக்கை நாயகன், எதிர்காலம் என்று போற்றப்பட்ட ரா‌ஷ்போர்ட் 426 ஆட்டங்களில் 138 கோல்கள் அடித்துள்ளார். அவர் 2016ஆம் ஆண்டு முதல் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு விளையாடினார்.

ஒரு முறை யூரோப்பா லீக், இரண்டு முறை எப்ஏ கிண்ணங்கள், இரண்டு முறை லீக் கிண்ணங்கள் ஆகியவற்றை ரா‌ஷ்போர்ட் வென்றுள்ளார்.

இங்கிலாந்து காற்பந்து அணிக்கு ரா‌ஷ்போர்ட் 60 முறை விளையாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்