விசாகப்பட்டினம்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுலும் ரவீந்திர ஜடேஜாவும் விளையாட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
முதல் போட்டியின் நான்காவது நாளன்று ஜடேஜா பின்தொடைத் தசைநாரில் காயமடைந்தார். ராகுலும் தொடையில் வலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சர்ஃபராஸ் கான், சௌரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (அணித்தலைவர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பரத் (விக்கெட் காப்பாளர்), துருவ் ஜுரெல் (விக்கெட் காப்பாளர்), அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார்.