கபில்தேவை முந்திய ஜடேஜா

கபில்தேவை முந்திய ஜடேஜா

1 mins read
271d7f29-83c8-4d19-bd12-7800c5281250
முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா. படம்: ஏஎஃப்பி -

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அரை சதமும் விளாசினார்.

இதன்மூலம், ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியும் அரைசதமும் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவை முந்தியுள்ளார்.

ஐந்தாவது முறையாக இச்சாதனையைப் புரிந்து பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ஜடேஜா. நான்கு முறை அந்த மைல்கல்லைக் கடந்த கபில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்