தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை-பெங்களூரு மோதிய ஆட்டத்தில் சிக்சர் மழை

1 mins read
1c4bba0e-a4bc-4837-89ab-dabd4ad1e844
படம்: சிஎஸ்கே/டுவிட்டர் -

இந்திய பிரிமியர் லீக் 2023 கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பெங்களூருவில் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 33 சிக்சர்கள் அடிக்கப்பட்டன.

சென்னை அணி 17 சிக்சர்களும், பெங்களூரு அணி 16 சிக்சர்களும் அடித்தன.

ஒரு ஆட்டத்தில் 33 சிக்சர்கள் அடிப்பது இது இரண்டாவது முறை. ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஆக அதிக சிக்சர்களும் 33 தான்.

இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியும் சென்னை அணியும் மோதிய ஆட்டத்தில் 33 சிக்சர்கள் விளாசப்பட்டன.

சென்னை-பெங்களூரு மோதிய ஆட்டத்தில் சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறிப்புச் சொற்கள்