அதிக வருவாய்: ரியால் முதலிடம்

லண்டன்: சென்ற 2022-23 காற்பந்துப் பருவத்தில் அதிக வருமானம் ஈட்டிய காற்பந்துக் குழு என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஸ்பானிய முன்னணிக் குழுவான ரியால் மட்ரிட்.

கடந்த 2017-18 பருவத்திற்குப் பிறகு, ‘வருமான லீக்’கில் ரியால் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதன்முறை. அக்குழு 2022-23 பருவத்தில் 831 மில்லியன் யூரோ (S$1.21 பில்லியன்) வருமானம் ஈட்டியது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி (826 மி. யூரோ), பிரான்சின் பிஎஸ்ஜி (802 மி. யூரோ) முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தன.

முந்தைய பருவத்தில் ஏழாமிடம் பிடித்த ஸ்பெயினின் பார்சிலோனா குழு, இம்முறை 800 மி. யூரோவுடன் நான்காமிடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் குழு (746 மி. யூரோ) ஓரிடம் கீழிறங்கி, ஐந்தாமிடத்தைப் பிடித்தது.

கடந்த 2021-22 பருவத்தில் ஏழாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குத் தாவிய இங்கிலாந்தின் லிவர்பூல், அதற்கடுத்த பருவத்தில் மீண்டும் ஏழாம் நிலைக்கு இறங்கியது.

வருமானப் பட்டியலின் முதல் 20 இடங்களில் எட்டு இடங்களை இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்கள் பிடித்துள்ளன. 2021-22 பருவத்தில் இந்த எண்ணிக்கை 11ஆக இருந்தது.

மகளிர் பிரிவில், 2022-23 பருவத்தில் 13.4 மி. யூரோ வருமானம் ஈட்டிய பார்சிலோனா குழு முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!