தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்டியிடமிருந்து வெற்றியைப் பறித்தது ரியால்

1 mins read
414b9182-7be9-4cf3-ab59-94df0105006c
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ரியால் மட்ரிட்டின் முதல் கோலைப் போடும் கிலியோன் எம்பாப்பே. - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டியை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது ஸ்பெயினின் ரியால் மட்ரிட்.

சாம்பியன்ஸ் லீக்கின் முதல் சுற்றுக்கு அடுத்த சுற்றின் முதற்கட்ட ஆட்டத்தில் சிட்டி, தனது சொந்த மண்ணான எட்டிஹாட் விளையாட்டரங்கில் தோல்வியடைந்தது. இனி ரியாலின் சொந்த மண்ணான பெர்னபாவ் அரங்கில் சிட்டி வென்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்படும். எட்ஹாட்டில் நடந்த ஆட்டத்தில் சிட்டியின் இரு கோல்களையும் போட்டார் எர்லிங் ஹாலண்ட்.

ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஹாலண்ட் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார். 60வது நிமிடத்தில் ரியாலின் கிலியோன் எம்பாப்பே கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி சிட்டியை மீண்டும் முன்னுக்கு அனுப்பினார் ஹாலண்ட். ஆனால், அதற்குப் பிறகும் சமநிலை கண்டது மட்டுமின்றி வெற்றியும் பெற்றது ரியால்.

பிராஹிம் டியாஸ் 86வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை 2-2ஆக ஆக்கினார். ஆட்டம் முடியவிருந்த நேரத்தில் ஜூட் பெலிங்கம் ரியாலின் வெற்றி கோலைப் போட்டார்.

மற்ற சாம்பியன்ஸ் லீக் முதல் சுற்றுக்குப் பிந்திய சுற்று ஆட்டங்களில் பிஎஸ்ஜி, பிரெஸ்ட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது, பிஎஸ்வியை 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் வென்றது யுவென்டஸ். பொருசியா டார்ட்மண்ட், ஸ்போர்ட்டிங் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

குறிப்புச் சொற்கள்